கரூர் -திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் 3 நிகழ்ச்சிகள் தொடர்பாக முக்கிய முடிவு.
கரூர் -திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் 3 நிகழ்ச்சிகள் தொடர்பாக முக்கிய முடிவு. கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சியின் அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் கே சி பழனிச்சாமி நெசவாளர் அணி தலைவர் ராஜேந்திரன் சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, வரும் செப்டம்பர் 15ம் தேதி ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி தொடர்பாக கட்சியினர் பொது இடங்களில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும். வரும் 17ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வருகை தர உள்ளதால் அனைவரும் கட்சி பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். வருகிற 20 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை அன்று மாலை நிறைவு செய்யும் வகையில் பணிகள் சிறப்பாக அமைய வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக முடித்த முதல் 10 வாக்குச்சாவடி முகவர்களுக்கு பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story






