கோவை சூலூர் அருகே பால் வேன் மோதி இருசக்கர வாகனம் விபத்து – 3 பேர் படுகாயம் !

கோவை சூலூர் அருகே பால் வேன் மோதி இருசக்கர வாகனம் விபத்து – 3 பேர் படுகாயம் !
X
கோவை அருகே சாலை விபத்து: பால் வேனில் மோதிய இருசக்கர வாகனம், மூவர் காயம்.
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம் பகுதியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கிராசிங்கில் கடந்து வரும்போது எதிரே வந்த பால் வேனில் மோதியது. இதில் வாகனத்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். மேலும், பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகன ஓட்டியும் வேனின் பின்புறம் மோதியதில் காயமடைந்தார். விபத்தில் காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story