நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி 3 நாள் சுற்றுப்பயணம் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா ஆகியோர் ஏற்பாடுகள் தீவிரம்..

X
Rasipuram King 24x7 |18 Sept 2025 9:48 PM ISTநாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி 3 நாள் சுற்றுப்பயணம் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா ஆகியோர் ஏற்பாடுகள் தீவிரம்
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (செப். 19) சுற்றுப்பயணம் மேற் கொள்ளகிறார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.ப ழனிசாமி நாமக்கல் மாவட்டத் தில் செப். 19, 20, 21 ஆகிய நாட்களில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு மக்களிடையே பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி, டாக்டர் வி.சரோஜா ஆகியோர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ராசிபுரம் தொகு தியில் ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் மாலை 5 மணியளவிலும், சேந்தமங்கலம் தொகுதியில் அக்கியம்பட்டி பகுதியில் மாலை 6.30 மணியளவிலும் பிரசாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, 20-ஆம் தேதி (சனிக்கிழமை) நாமக்கல் தொகுதியில் மாலை 5 மணியளவில் நாமக்கல் - சேலம் சாலை சந்திப்பிலும், மாலை 6.30 மணியளவில் பரமத்தி வேலூர் தொகு திக்கு உள்பட்ட பரமத்தி வேலூர் - பொத்தனூர் நான்கு சாலை சந்திப்பிலும், 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகிலும், குமாரபாளையம் தொகுதியில் குமாரபாளையம் ராஜம் திரையரங்கம் அருகிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிர சார பொதுக் கூட்டத்தில் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட கட்சியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட் டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சரும், கட்சியின் மகளிரணி இணைச்செயலாளருமான டாக்டர் வி.சரோஜா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரை வரவேற்கும் வகையில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பேனர்கள், தட்டிகள் வைத்து கட்சியினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
Next Story
