காவலர் போல நடித்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது !

காவலர் போல நடித்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது !
X
தங்களை காவலர்கள் என சொல்லி வீட்டில் நுழைந்து நகை-பணம் பறிக்க முயன்ற மூவர் கைது.
கோவை வடவள்ளி அருகே காவலர் என்று கூறி கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். கஸ்தூரி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார், வீட்டில் தனியாக இருந்தபோது, தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திய இருவர், வங்கி பரிவர்த்தனை விசாரணை என்ற பெயரில் வீட்டுக்குள் நுழைந்து தாக்கி, நகை-பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் ஒரு அறைக்குள் பூட்டிக்கொண்டு அருகில் இருப்பவர்களை அழைத்ததால், குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். விசாரணையில், ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகுமார், முன்னாள் ராணுவ வீரர் ஜிம்சன் (ராமநாதபுரம்), இடிகரை கார்த்திக் ஆகியோரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story