போச்சம்பள்ளி அருகே புரட்டாசி மாதம் பிறந்தது-திருப்பதிக்கு சென்ற 3 கிராமக்கள்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர், ஜம்புகுட்டப்பட்டி, கோணனூர், கிராமத்தில் சுமார் 1000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டு முழவதும் சனிக்கிழமை வீட்டில் ஏழுமலையான் படத்திற்கு முன்பு உண்டியலில் பணத்தை போடுகின்றனர். இந்த போடப்பட்ட பணத்தை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பக்தர்கள் பொது மக்கள் மஞ்சள் நிற துணியில் அந்த பணத்தை போட்டு அந்த மொத்த பணத்தை திருப்பதி கோவில் உண்டியலில் போட திருப்பத்தூர், வேலூர் வழியாக நேற்று நடைபயணமாக திருப்பதிக்கு சென்றனர். இதனால் இந்த மூன்று கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
Next Story

