விளையாடும் போது தவறி வெந்நீரில் விழுந்து 3 வயது பெண் குழந்தை பலி

X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்மாவிளங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 33. இவரது மனைவி சத்தியா, 28. தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள். கடந்த 11ம் தேதி, மனைவி சத்தியாவின் பிறந்த ஊரான செய்யூர் அடுத்த சின்னவெண்மணி கிராமத்திற்கு, திருவிழாவிற்காக லட்சுமணன் குடும்பத்துடன் வந்தார்.அன்று காலை 10:30 மணியளவில், இவரது இரண்டாவது மகள் தீபிகா, 3, வீட்டின் அருகே விளையாடிய போது, பசுவுக்கு கஞ்சி காய்ச்ச வைக்கப்பட்டு இருந்த வெந்நீரில், தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக 13-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தீபிகா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9:00 மணியளவில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து, செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

