கடன் தொல்லை – 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி !

X
பொள்ளாச்சியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (35), அவரது சகோதரிகள் மீனாட்சி (36), முத்துலட்சுமி (46) ஆகிய மூவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் வாடகை வீட்டில் குடியேறியிருந்தனர். குறைந்த வட்டியில் பணம் வாங்கி, அதிக வட்டிக்கு கடனாக கொடுத்தும், சீட்டு நடத்தியும் வந்த நிலையில், வசூல் ஆகாமல், அவர்கள் பெற்ற கடனை செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து, மூவரும் பொள்ளாச்சியில் விஷம் குடித்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

