கோவை ‘ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்’ 3வது ஆண்டு மாரத்தான் !

இதயமும் புற்றுநோயும் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டிய கோவை மாரத்தான்.
கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை, எல்.எம்.டபிள்யூ., லட்சுமி கார்டு கிளாத்திங் மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து, இதயக் குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்’ 3வது ஆண்டு விழிப்புணர்வு மாரத்தான் நேற்று பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் கோகுலகிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 1, 3, 5 மற்றும் 10 கி.மீ தூரங்களில் குழந்தைகள் முதல் 59 வயது வரையிலானோர் வரை 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாரத்தான் மூலம் திரட்டப்பட்ட நிதியால் இதயக் குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகள் சிகிச்சை பெற்றதாக டாக்டர் ரகுபதி வேலுசாமி தெரிவித்தார்.
Next Story