சோமனூரில் ஆடுகள் திருட முயன்ற 3 பேர் கைது !
கோவை, சோமனூர் அருகே சேடபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் (54) என்பவர் வீட்டின் அருகே ஆடு, கோழி வளர்த்து வந்தார். அதிகாலை நேரத்தில் 3 பேர் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து, அவரது சாலைக்குள் நுழைந்து ஆடுகளை திருட முயன்றனர். இதைக் கவனித்த சுப்பிரமணியம் அவர்களைத் தடுக்க முயன்ற போது, ஒருவன் தடுமாறி விழுந்து காயமடைந்தான். விசாரணையில் அவர் தீபக் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடைய பாண்டியன், தீபக், அருள் பிரகாஷ் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Next Story




