பசுமாடுகளை திருடிய 3 பேர் கைது சந்தையில் விற்பனைக்கு வந்தபோது மீட்பு

பசுமாடுகளை திருடிய 3 பேர் கைது சந்தையில் விற்பனைக்கு வந்தபோது மீட்பு
X
குற்றச் செய்திகள்
மாத்துார் அருகே உள்ள செட்டிப் பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(49). விவசாயியான இவர் விலை உயர்ந்த 3 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி இரவு வீட்டின் அருகே உள்ள வைக்கோல் போரில் 3 பசுமாடுகளையும் கட்டியிருந்தார். காலை யில் பார்த்தபோது 2 மாடுகளை காண வில்லை. இதுபற்றி மாத்துார் போலீசில் வெள் ளைச்சாமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் புதுகை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நடக்கும் மாட் டுச்சந்தைக்கு நண்பர்களுடன் சென்ற வெள்ளைச்சாமி அங்கு தனக்கு சொந் தமான மாடுகள் விற்பனைக்கு வந்துள் ளதா என்று பார்த்தார். அப்போது திருகோணம் சந்தையில் காணாமல் போன 2 பசுமாடுகளையும் ஒருவர் வைத்திருந்ததை பார்த்து அவரிடம் சென்று விசாரித்தார். அப்போது இந்த மாடுகளை விலைக்கு வாங்கி விட்டதாக கூறினார். இதுபற்றி உடனடியாக மாத் துதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பசுமாடுகளை விலைக்கு வாங்கிய நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பசுமாடுகளை திரு டியது செட்டிப்பட்டி அருகே உள்ள ஊரத்திப்பட்டியை சேர்ந்த பூபதி (22), லெக்குடிபட்டியை சேர்ந்த அஜித்குமார் (22), காயாம்பட்டியை சேர்ந்த வீரமணி (23) என்பது தெரியவந்தது. இதைய டுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கீரனுார் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக் கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story