கோவை: மனித நுண்ணறிவு குறித்து 3 நாள் பயிற்சி பட்டறை !
கோவை அரசூர் KPR கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் “ஆறுச்சுடர்” நிறுவனம் சார்பில் மனித நுண்ணறிவு (Human Intelligence) குறித்த 3 நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, “மனித நுண்ணறிவு” ஆய்வு புத்தகத்தை வெளியிட்டார். ஆறுச்சுடர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிகா நேதாஜி, இணை இயக்குநர்கள் வெங்கட், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு இந்தியாவின் முதல் “Brain GPT – Human Intelligence Workshop” எனும் பெயரில் நடத்தப்பட்டது. மனித மூளைச் செயல்பாடு, தீர்மான திறன், தலைமைப் பண்புகள் மற்றும் AI-யுடன் மனித நுண்ணறிவை சமநிலைப்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஷிகா நேதாஜி கூறுகையில், “Artificial Intelligence வளர்ந்தாலும், Human Intelligence தான் வழிநடத்த வேண்டும். கோவையிலிருந்து இந்தியா உலகளாவிய ‘Human Intelligence Hub’ ஆக மாறும்,” என்றார். இந்த முயற்சியால் கோயம்புத்தூர் நகரம் உலகின் மூன்றாவது மனித மூளை செயல்பாட்டு திட்டம் தொடங்கும் நகரமாக உருவாகும் என்ற பெருமை பெற்றுள்ளது.
Next Story




