கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி: 3 பேருக்கு குண்டர் சட்டம் !

X
கோவை சூர்யாநகர் அருகே ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டைகள் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில், 3 பேருக்கு குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 22ஆம் தேதி இருகூர்–சிங்காநல்லூர் ரயில் பாதையில் மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறை விசாரணை நடத்தி, ஒண்டிப்புதூர் மற்றும் புல்லுக்காட்டு பகுதிகளைச் சேர்ந்த தினேஷ், ஆகாஷ், வேதவன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தது. அவர்களில் ரயிலை சேதப்படுத்தி பயணிகளின் உடைமைகளை திருடும் நோக்கில் மரக்கட்டைகள் வைத்தது உறுதியானதால், தினேஷ், ஆகாஷ், வேதவன் ஆகியோர்மீது கோவை மாநகர காவல் ஆணையர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தார். கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Next Story

