கோவை அருகே ரயிலில் நகை திருடிய தம்பதி உட்பட 3 பேர் கைது !

கோவை அருகே ரயிலில் நகை திருடிய தம்பதி உட்பட 3 பேர் கைது !
X
போத்தனூர் ரயிலில் 6 பவுன் நகை திருட்டு – தம்பதி, சிறுவன் கைதுசெய்து நகைகள் மீட்பு.
கோவை அருகே ஓடும் ரயிலில் பயணியிடம் நகை திருடிய வழக்கில் தம்பதி மற்றும் சிறுவன் உட்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் மருதகுளத்தை சேர்ந்த இசக்கி குடும்பத்துடன் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் போத்தனூர் அருகே வந்தபோது, ஒரு சிறுவன் அவர்களின் படுக்கையில் இருந்த பொருட்களை திருட முயன்றது கவனிக்கப்பட்டது. இதனை தடுத்து நிறுத்திய இசக்கியுடன் வாலிபர் ஒருவரும் தகராறு செய்து தாக்கி, சிறுவனுடன் ரயிலில் இருந்து இறங்கி தப்பினார். பின்னர் இசக்கி தங்களின் பையில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை உணர்ந்து, போத்தனூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், நகை திருட்டில் போத்தனூர் செட்டிபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த உஜாத் அலி, அவரது மனைவி சத்தியா, மற்றும் அவர்களது 12 வயது உறவினர் சிறுவன் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.
Next Story