காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடித்த வழக்கில் 3 பேர் கைது.

X
Paramathi Velur King 24x7 |9 Jan 2026 7:05 PM ISTபரமத்தி வேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கதவணை அருகே காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
பரமத்தி வேலூர், ஜன.8: வேலூர் காவல் உதவி ஆய்வாளர் சாந்தகுமார், தலைமைக் காவலர் ஜான்பாட்சா மற்றும் போலீஸார் புதன்கிழமை குப்புச்சிபாளை யம், பொய்யேரி, நன்செய் இடையாறு ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் சிலர் வெடிவைத்து மீன் பிடிப்பதகாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கதவணை பகுதியில் வெடிவைத்து மீன் பிடித்திருந்த 2 பேர் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், பொய்யேரி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவசங்கர் (38), பர மத்தி வேலூர், தெற்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரன் (50) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் மீன் பிடிப்பதற்காக காவிரி ஆற்றில் வெடி மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் இந்த வெடிமருந்தை மோகனூர் வட்டம், நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த பூபாலனிடமிருந்து (36) வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பூபாலனை போலீஸார் கைது செய்தனர். மூவரிடமிருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
