ராமாபுரம்புதூர் அன்புநகர்–3ல் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

X
NAMAKKAL KING 24X7 B |6 Feb 2026 8:53 PM ISTநாமக்கல் மாவட்டம் ராமாபுரம்புதூர் அன்புநகர்–3 பகுதியில், உலக மக்கள் வாழ்வு வளம் பெறும் நோக்கில் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை அன்புநகர்–3 வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவை அன்புநகர்–3-ன் திரு. ஆனந்தன், திரு. குமாரசாமி, திரு. மாதேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துறவி சீடர்களான அஜாமிர்தானந்தபுரி, நிகிலேஷ் ஆனந்தபுரி மற்றும் உமாநாத் சுவாமிகள் ஆகியோர் திருவிளக்கு பூஜை வழிபாடுகளை நடத்தி, பக்தர்களுக்கு அருளுரை வழங்கினர். திருவிளக்கு வழிபாட்டில் அன்புநகர்–3 பகுதியில் வசிக்கும் பெண்கள், தாய்மார்கள் மற்றும் பெரியோர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தியுடன் வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை அன்புநகர்–3 வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் சரவணன், கனகராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
