கொலை முயற்சி : 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

X
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்தன் பாலம் பகுதியைச் சேர்ந்த பெப்ளின் @ ரிஜோ என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இது சம்மந்தமாக செமிலா விக்டர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தம்பத்துகோணம் மாதா தெருவை சேர்ந்த ஜோசப் இருதயராஜ் என்பவருடைய மகன் ஜோசப் பெலிண்டன், தம்பத்துகோணம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மதுக்குமார் என்பவரது மகன் சூர்யா, புன்னைநகர் ஆல்பர்ட் ஜோய் என்பவரது மகன் ஆன்டோ ததேயு மிசல் ஆகியோர் மீது ஆசாரிபள்ளம் காவல் நிலைய குற்ற எண் 190/2021 u/s 34, 294(b), 307, 342, 506(2) IPC ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்ற வழக்கு விசாரணை, சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு குற்ற வழக்கறிஞர்,நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், நேசமணி நகர் வட்ட ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
Next Story

