நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1532 மாணவ, மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் பேச்சு.

நாமக்கல் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் 512 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 05.01.2026 சென்னையில் நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், அரசு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 3201 மாணாக்கர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், கொமாரபளையம் ஆகிய 5 அரசு கலைக் கல்லூரிகளில் 2452, கொல்லிமலை, சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 282, நாமக்கல் அரசு சட்ட கல்லூரியில் 62, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 85, அரசு மருத்துவக் கல்லூரியில் 85, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் 235 என மொத்தம் 3201 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பயிலும் 512 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இதில் தமிழ்த்துறை -48, ஆங்கிலத்துறை -16, பொருளியல்-72, வணிகவியல் 55, வணிக நிர்வாகத்துறை -51, வரலாற்றுத்துறை-32, புள்ளியியல் துறை-11, கணிதத்துறை-13, இயற்பியல் துறை-22, வேதியியல் துறை-50, தாவரவியல் துறை -40, விலங்கியல் துறை -37, கணினி அறிவியல் துறை-28, புவியியல் துறை-37 என மொத்தம் 512 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.இளைஞர் சமுதாயம் உயர்கல்வியில் மேலும் சிறப்பாக முன்னேற வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலம் முழுவதும் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்களை மாணவ, மாணவியர்களை எப்படியாவது கல்வி பயில வைக்க வேண்டும் என்ற அர்பணிப்போடுதான் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் மாணவர்கள் இளநிலை கல்வியை முடித்து, அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும். முதுநிலை கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர் ரூ.8.00 இலட்சம் வரை ஆண்டு வருமானம் சான்று வழங்கினால், மாணவர்கள் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க ஏதுவாக ரூ.36.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த பல்கலைக்கழகத்தினை தேர்வு செய்து, உங்களுக்கு விருப்பான பாடப்பிரிவுகளில் உயர்கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது.

மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் வழிகாட்டி நிகழ்ச்சி, வேலைவாய்ப்புகள் என எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க ”நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இத்திட்டங்களை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்ப்பதுடன், சிந்தித்து பார்க்க வேண்டும். இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வதோடு, ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, கொமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 267 மாணவ, மாணவியர்களுக்கும்,தொடர்ந்து, இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 753 மாணவ, மாணவியர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் நவலடி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர் மு.இராஜேஸ்வரி, இணை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (விலங்கியல் துறை) முனைவர் மோ.இராஜசேகர பாண்டியன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story