சூலூரில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்தல் – 3 பேர் கைது, 2 லாரிகள் பறிமுதல் !

சூலூரில் திடீர் வாகன சோதனை: எம்-சேண்டு, ஜல்லி பறிமுதல்.
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பப்பம்பட்டி பிரிவு அருகே, அனுமதி இன்றி கிராவல் மண் மற்றும் ஜல்லி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் கண்காணிப்பில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, லாரிகளில் 4 யூனிட் எம்-சேண்டு மற்றும் 4 யூனிட் ஜல்லி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர்கள் குமார் (40), கார்த்திக் (29) மற்றும் லாரி உரிமையாளர் நஞ்சப்பன் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக சூலூர் காவல் நிலையம், சுரங்கத் துறை அதிகாரிகளின் புகாரின் பேரில், மினரல்ஸ் சட்டம் மற்றும் BNS பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Next Story