கோவை பா.ஜ.க நிர்வாகியை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது – மனைவி உட்பட 2 பேருக்கு போலீஸ் வலை

X
பா.ஜ.க மண்டல துணைத் தலைவர் அஜயை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேருநகர் காளப்பட்டியை சேர்ந்த அஜய், மனைவி பிரியா மதமாற்றம் செய்ததை அடுத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனுடன் பகுதி கடைகளில் போதைப்பொருள் விற்பனை குறித்து அஜய் போலீசில் புகார் அளித்ததும் முன்விரோதமாக அமைந்தது. இந்த நிலையில், நாகராஜ் மற்றும் அஸ்வின் குமார் இணைந்து அஜயை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்துடன் தொடர்புடைய நாகராஜ், அஸ்வின் குமார், அனிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அஜயின் மனைவி பிரியா மற்றும் வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

