போலி ஆவணம் தயாரித்து 3 கோடி மோசடி 3 ஆண்டுகள் சிறை

X
திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனக்கு சொந்தமான 2.32 ஏக்கர் இடத்தை குமரன் சாலையில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க சென்றுள்ளார். ஆனால் அந்த இடத்தை ஏற்கனவே சுப்பிரமணியத்திற்கு தெரியாமல் ராமகிருஷ்ணன், சிவக்குமார் மற்றும் செல்வராஜ் ஆகியோர் வாங்கியது போல் ஆவணம் தயார் செய்து அந்த வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் ராமகிருஷ்ணன், சிவக்குமார், செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று குற்றம் சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சிவக்குமார் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Next Story

