ராயக்கோட்டை: அர்ச்சகர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை.

ராயக்கோட்டை: அர்ச்சகர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை.
X
ராயக்கோட்டை: அர்ச்சகர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை.
கிருஷ்ணகிரி மவட்டம் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகேயுள்ள சஜ்ஜலப்பட்டி பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (48), அர்ச்சகர். சம்பவம் அன்று கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி இவர்களிடம் இருந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம், 2 செல்போன்கள் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை எடுத்துசென்றனர். இது தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் 3 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, சபரிநாதன், சேட்டு, கண்ணப்பன் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா 5 ஆயிரம் பணம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story