கலால் உதவி ஆணையர் காரில் கொண்டு சென்ற லஞ்சப்பணம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

X
விருதுநகரில் கலால் உதவி ஆணையர் காரில் கொண்டு சென்ற லஞ்சப்பணம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விருதுநகர் மாவட்ட கலால் உதவி ஆணையராக பணிபுரிபவர் கணேசன் (59) இவர் மதுபான கடைகள், தனியார் பார் உரிமையாளர்கள், மெத்தனால் விநியோகிக்கும் நிறுவனங்கள் ஆகியோருடன் மாத மாதம் லஞ்சப்பணம் பெற்று வருவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் காவல்துறையினர் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கண்காணித்து வந்தனர் இந்த நிலையில் இரவு லஞ்ச பணத்துடன் வாடகை காரில் அவரின் சொந்த ஊரான திருச்சிக்கு சென்று கொண்டிருந்த பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசார் விருதுநகர் அருகே சத்திர ரெட்டிய பட்டி சோதனை சாவடியில் காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் அவரிடம் 3, 75 ஆயிரம் பணம் அவர் கைப்பையில் இருந்தது இது குறித்து அவரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அவர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து வழக்கு அவரிடம் இருந்த பணம் குறித்து விசாரணை நடத்தினர் பணம் குறித்து உரிய விளக்கம் அளிக்காத காரணத்தினால் அவர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

