ரூபாய் 3 கோடியே 86 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி.
Karur King 24x7 |9 Aug 2024 10:02 AM GMT
ரூபாய் 3 கோடியே 86 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி.
ரூபாய் 3 கோடியே 86 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி. கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம், தொகுப்பு வீடு பழுது பார்க்கும் திட்டத்தில் தேர்ந்தெடுத்த பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கும் விழா கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 59 பயனாளிகளுக்கு தலா 3.5 லட்சம் செலவில் பணிகளை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டது. இதே போல தொகுப்பு வீடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 299 பயனாளிகளுக்கு தல ரூபாய் 60 ஆயிரம் வீதம் பணிகளை மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த இரண்டு திட்டத்தின் கீழ் ரூபாய் சுமார் 3 கோடியே 86 லட்சம் மதிப்பில் பணிகளை மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி, தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், தாந்தோணி ஒன்றிய துணை செயலாளர் ஜெகதாபி கார்த்தி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரண்டு திட்டங்களிலும் பணிகளை மேற்கொள்ள ஆணைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசுக்கும், எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Next Story