கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கும் கண்மாய்..!
Sivagangai King 24x7 |24 July 2024 10:30 AM GMT
சிவகங்கை அருகே கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சீமை கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கும் ஊத்திக்குளம் பெரிய கண்மாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
சிவகங்கை வட்டம், ஊத்திக்குளம் கிராமத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பில் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்தக்கண்மாயில் 3 மடைகளும், 2 கலிங்கிகளும் நிறுவப்பட்டுள்ளன. இதில் சேரும் மழை நீர் மூலம் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன வசதி கிடைத்து வந்தது. ஜமீன் கண்மாய் பிரிவில் இந்தக்கண்மாய் இருந்து வருகிறது. இதை பராமரிப்பதற்கான அலுவலகம் காரைக்குடியில் உள்ளது. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக இந்த பெரியகண்மாய் தூர்வாரப்ப நடாமல் புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்த காரணங்கள் தெரியவில்லை இதில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென காரைக்குடியிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலத்தை அணுகி பல முறை மனு அளித்தும் எந்த வித பயனும் இல்லாததால், விவசாயம் செய்யத்தயாராக இருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Next Story