கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 30-தேதிக்கு ஒத்தி வைப்பு
Coonoor King 24x7 |26 July 2024 11:11 AM GMT
ஆகஸ்ட் 30-தேதிக்கு ஒத்தி
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 30-தேதிக்கு ஒத்தி வைப்பு.. கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் உள்ளிட்ட சிபிசிஐடி போலிசாரும், அரசு வழக்கறிஞர் சாஜகான் ஆகியோரும் ஆஜராகினர். அதே போல் குற்றம்சாட்டபட்டோர் தரப்பில் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். விசாரணையின் போது மாவட்ட நீதிபதி அப்துல் காதர் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் கூடுதல் புலன் விசாரணையை எப்போது முடித்து நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வருவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சாஜகான் விரைவில் புலன் விசாரணையை முடித்த பிறகு நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வந்துவிடுவதாக தெரிவித்தார். மேலும் கொடநாடு கொலை கொள்ளை விசாரணையில் வெளிநாடு தொலை தொடர்பு குறித்து இன்டர் போல் உதவி நாடி விசாரணை நடந்து வருவதாலும் மேலும் குற்றம்சாட்டபட்டவர்களில் 2 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அளித்து உள்ளதாகவும் எனவே கால அவகாசம் தேவை என அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டார். அதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார். பேட்டி சாஜகான் அரசு தரப்பு வழக்கறிஞர்
Next Story