திமுக நகரக் கழகத்தின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் 30 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்

திமுக நகரக் கழகத்தின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் 30 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்
X
திமுக நகரக் கழகத்தின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் 30 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்
திமுக நகரக் கழகத்தின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் 30 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருப்பூர் தெற்கு மாவட்ட தாராபுரம் திமுக நகரக் கழகத்தின் சார்பில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் நேற்று மாலை முதல் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்தும், வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் ,மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நேற்று மாலை தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு பகுதியில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாராபுரம் நகரத்தில் உள்ள வார்டுகள் வாரியாக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கே.வி.பிரகாஷ் பொதுமக்களை சந்தித்து பேசியதாவது, தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள். அதற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், அடுத்தபடியாக சட்டமன்றத் தேர்தல் வருகிறது அந்த தேர்தலுக்காகவும் தாராபுரம் நகராட்சி வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திமுக நிர்வாகிகளும் சிறப்பாக உழைத்து சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டமன்ற உறுப்பினரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேலும் தாராபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட எந்த வார்டு பகுதியில் இருந்தும் நேரடியாக என்னை தொடர்பு கொண்டு பேசலாம் எனவும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நலத்திட்ட உதவிகளை செய்வேன் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே .இ.பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், திமுக நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி, வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஹைடெக் அன்பழகன், ராஜாத்தி பாண்டியன், ஸ்ரீதர் வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் சிவசங்கர் உட்பட இன்னால் முன்னாள் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story