உடுமலை அருகே சாலையோரம் 30 க்கு அகற்றம்
Udumalaipettai King 24x7 |6 Sep 2024 4:49 PM GMT
நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை
உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்திற்கு எதிராக ஊரக,மாவட்ட, மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலமாக போக்குவரத்தை பெற்று பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பயனடைந்து வருகின்றனர்.இந்த சாலைகளின் ஓரங்களில் மழைக்காலங்களில் செடிகள் முளைத்து புதர் மண்டி விடுவது வாடிக்கையான நிகழ்வாகும். அந்த வகையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சாலையின் ஓரங்களில் முள்செடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது.இதனால் சாலையின் வளைவு மற்றும் ஒரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் ஓரங்களில் உள்ள புதர்கள் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை உதவி பொறியாளர் லோகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நெடுஞ்சாலை துறையின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story