சங்கரன்கோவில் அருகே 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம்
Sankarankoil King 24x7 |20 Oct 2024 5:07 AM GMT
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள சுப்புலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வமுருகன். இவர் சென்னை புதுப்பேட்டை பகுதியில் காவலர் குடியிருப்பு 15வது மாடியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் அவரது உடல் ஆம்புலன்சில் சொந்த ஊரான சுப்புலாபுரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், சங்கரன்கோவில் சரக துணை கண்காணிப்பாளர் அறிவழகன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து சுப்புலாபுரம் இடுகாட்டில் காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க வீர மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். பின்னர் அவரது உடல் எரிமேடையில் வைத்து எரிக்கப்பட்டது...
Next Story