குமரி : பிரபல கொள்ளயன் கைது 30 பவுன் நகைகள் மீட்பு
Nagercoil King 24x7 |18 Dec 2024 2:56 AM GMT
குளச்சல்
குமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் வீடுகளில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் குளச்சல் டிஎஸ்பி (பொ) சந்திரசேகரன் மேற்பார்வையில், குளச்சல் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று தனிப்படையினர் குளச்சல் அருகில் லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது போலீசாரை கண்டதும் சந்தேகத்திற்கிடமான சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த நபரை துரத்தி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் மதுரை ஆரப்பாளையம் பகுதி சேர்ந்த சுந்தர்ராஜன் (54) என்று தெரிய வந்தது. தொடர் விசாரணையில் சுந்தர்ராஜ் குளச்சல் பகுதியில் 3 வீடுகளிலும், நித்திரவிளை யில் 2, கொல்லங்கோடு, தக்கலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடுகளிலும் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. போலீசார் அவர் கைது செய்து 30 பவுன் தங்க நகைகள், 2.5 கிலோ வெள்ளி, குத்துவிளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story