ராமநாதபுரம் 30 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சிரங்குடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சிரங்குடி ஊராட்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2021-2022ல் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நியாய விலை கடை புதிய கட்டிடத்தையும் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் புதிய கட்டிடத்தையும் திருப்புல்லாணி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் & திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்யன் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மற்றும் காஞ்சிரங்குடி ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி துணைத்தலைவர் பரீக்கா உட்பட கழக நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story