செல்லாண்டிபாளையம் அருகே சட்டவிரோத மது விற்பனை. 30- குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.
Karur King 24x7 |2 Jan 2025 12:36 PM GMT
செல்லாண்டிபாளையம் அருகே சட்டவிரோத மது விற்பனை. 30- குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.
செல்லாண்டிபாளையம் அருகே சட்டவிரோத மது விற்பனை. 30- குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜனவரி 1-ம் தேதி காலை 10.30 மணி அளவில் செல்லாண்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் செயல்படும் போஸ்ட் ஆபீஸ் அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், அங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த தாந்தோணிமலை, ராயனூர், நேரு நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் தண்டபாணியை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 30 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்த தாந்தோணி மலை காவல்துறையினர் பின்னர் அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story