ஆம்பூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 30க்கும் பாஜகவினர் கைது..

ஆம்பூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 30க்கும் பாஜகவினர் கைது..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 30க்கும் பாஜகவினர் கைது.. மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் முருகர் மலைகோவிலில், உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கோரி இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத்துணைத்தலைவரும், ராமாநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி சில அமைப்புகளுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆய்வு செய்து அங்கு அசைவ உணவு சாப்பிட்டதாக புகைப்படம் வெளியான நிலையில், முருகர் மலையில் அசைவ உணவு சாப்பிட்டத்தை கண்டித்தும், சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதிக்ககோரியும் திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கூட்டுச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட முயன்ற 30 மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினரை ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்..
Next Story