வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு - மர்மநபர்கள் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்*

X

*காரியாபட்டியில் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு - மர்மநபர்கள் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்* விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கே.செவல்பட்டி அழகர்சாமி நகரில் குடியிருந்து வரும் சுப்புராஜ். இவர் எலக்ட்ரீஷனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆண்டாள் தேவி தி
காரியாபட்டியில் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை திருட்டு - மர்மநபர்கள் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கே.செவல்பட்டி அழகர்சாமி நகரில் குடியிருந்து வரும் சுப்புராஜ். இவர் எலக்ட்ரீஷனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆண்டாள் தேவி திருச்சுழி நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சுப்புராஜ் மற்றும் அவரது மனைவி, மகன் பரத்ராம் ஆகிய 3 பேரும் வீட்டை பூட்டி விட்டு வீட்டின் சாவியை வெளியே வைத்து சென்று விட்டனர். இந்த நிலையில் மகன் பரத்ராம் கல்லூரி முடிந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்துள்ளது உடனே பரத்ராம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் வந்து பார்த்தபோது பீரோலில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. உடனே சுப்புராஜ் காரியாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையிலான போலீசார் மற்றும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி மதிவாணன் நேரில் ஆய்வு செய்தார். இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரியாபட்டி காவல் நிலையம் பின்புறம் உள்ள ஜெகஜீவன்ராம் தெருவில் 5 வீடுகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 4 தொலைபேசிகள், 40 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். காரியாபட்டி பகுதியில் மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் ரோந்துப் பணிகளை துரிதப்படுத்த வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story