ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை நடுவே 30 அடி கானாறு பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரிஓட்டுநர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை நடுவே 30 அடி கானாறு பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரிஓட்டுநர் உயிரிழப்பு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் ஏற்பட்ட சோகம். ராணிப்பேட்டை மாவட்டம்.. அரக்கோணத்திலிருந்து திருப்பத்தூருக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள கானாறு பாலத்தின் கீழ் 30 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் லாரி ஓட்டுநர் பெருமாள் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார், உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறையினர், மற்றும் காவல்துறையினர் பள்ளத்தில் இடிபாடிகளில் சிக்கிய லாரி ஓட்டுநர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, லாரியை கிரேன் இயந்திரம் மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து அப்புறபடுத்தும் பணியில் ஈடுப்பட்டனர், அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து, ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும், லாரி ஓட்டுநர் பெருமாள் என்பவருக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், விபத்தில் சிக்கி பெருமாள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Next Story



