தனியார் நர்சிங் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என புகார் தெரிவித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 30 க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்டணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி சாலை மறியல்

தனியார் நர்சிங் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என புகார் தெரிவித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 30 க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்டணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
X
தனியார் நர்சிங் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என புகார் தெரிவித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 30 க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்டணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்
அருப்புக்கோட்டை அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என புகார் தெரிவித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 30 க்கும் மேற்பட்டோர் தங்கள் கட்டணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்; போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் உடனடியாக கலைந்து சென்றனர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில் தமிழ்நாடு பெண்கள் கல்லூரி என்ற நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 200 க்கும் மாணவியர்கள் படித்து வந்தனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் இந்த கல்லூரிக்கு உரிய அங்கீகாரம் இல்லை என புகார் தெரிவித்து தாங்கள் கல்லூரியில் சேர்க்கும் போது வழங்கிய மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து சான்றிதழ்களை திரும்ப வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கல்வி கட்டணத்தை திரும்ப பெற்றுத் தரவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கல்வி கட்டணம் செலுத்தாத பெரும்பாலான மாணவிகள் சான்றிதழ்களை பெற்று சென்று விட்டனர். இந்நிலையில் இன்று சுமார் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தாங்கள் வழங்கிய கல்வி கட்டணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ராமசாமிபுரம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.‌
Next Story