தைப்பூசத் திருநாளையொட்டி முத்துக்குமாரசாமி 30 ஆண்டுகளுக்கு பிறகு காவடி

தைப்பூசத் திருநாளையொட்டி முத்துக்குமாரசாமி 30 ஆண்டுகளுக்கு பிறகு காவடி
X
குமாரபாளையத்தில் தைப்பூசத் திருநாளையொட்டி முத்துக்குமாரசாமி 30 ஆண்டுகளுக்கு பிறகு காவடி எடுத்த பக்தர்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம் உள்ளது 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் தைப்பூசம் பங்குனி உத்திரம் ஆவணி அவிட்டம் உள்ளிட்ட திருவிழாக்கள் வருடம் தோறும் நடைபெறும் இந்தாண்டு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு 30 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த காவடி ஆட்டம் தற்பொழுது காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர் முன்னதாக கடந்த எட்டு நாட்களாக கடுமையான விரதம் இருந்த பக்தர்கள் இன்று காலை காவிரி ஆற்றில் புனித நீராடி காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து காவடி எடுத்தனர் காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்டு குள்ளங்காடு கலைவாணி தெரு ஆரம்ப பாடசாலை தெரு மற்றும் காவிரி நகர் பெராந்தார்காடு ஏரி தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பம்பை மேளத்தின் இசைக்கு தகுந்தபடி காவடி ஆட்டம் ஆடியபடி பக்தர்கள் முத்துக்குமாரசாமி ஆலயத்தில் வந்து அடைந்தனர் பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story