சிவன்மலையில் தளபதி குரூப் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து 30 ஆண்டுகளாக சேவை 

சிவன்மலையில் தளபதி குரூப் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து 30 ஆண்டுகளாக சேவை  கார்த்திகேயன் சேனாபதி பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி பாராட்டு
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் தைப்பூசத் தேரோட்டம் தொடங்கிய நிலையில் நேற்று காலை முதல் காங்கயம், தாராபுரம், சென்னிமலை மற்றும் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் காவடிக் குழு சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் நீர் மோர் பந்தல் அமைத்து சேவை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிவன்மலையை சேர்ந்த தளபதி குரூப் என்ற தன்னார்வலர்கள் 30-வது வருடமாக நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர், நீர் மோர் ஆகியவற்றை வழங்கினர். இதில் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் மற்றும் அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. ஜவஹர், சிவன்மலை வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story