தூண்டில் வளைவு பணிகளை ஜூன் 30க்குள் முடிக்க உத்தரவு

X
குமரி மாவட்டம் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு பாதுகாப்பான மீன்பிடி இறங்கு தளமாக மேம்படுத்துவதற்கு நபார்டு திட்டத்தின் கீழ் 26 கோடிக்கு ரூபாய் ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தூண்டில் வளைவு மற்றும் வலை பின்னும் கூடம் போன்ற பணிகள் ஜனவரி 20 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூண்டில் வளைவில் நீட்டிப்பு பணியினை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கலெக்டர் அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார். மேலும் ஜூன் 30க்குள் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்து மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அந்தப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிப்பு பொருட்களையும் கலெக்டர் நேற்று பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், உதவி இயக்குனர் மற்றும் துறை பணியாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
Next Story

