ஆரணியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 30 பேர் கைது.

X

சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை கைது கண்டித்து ஆரணியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 30 பேர் கைது.
ஆரணி. சென்னையில் டாஸ்மாக் முறைகேட்டினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து ஆரணியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 30 பேரை நகர போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். ஆகையால் அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து ஆரணி பழைய பஸ்நிலையம் அருகில் மாவட்டதலைவர் கவிதாவெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கூறிய போலீஸார் பாஜகவினர் 30 பேரை கைது செய்து ஆரணி கொசப்பாளையம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதில் மாவட்டசெயலாளர்கள் சதீஷ்குமார், டி.பாஸ்கர், நகரதலைவர் மாதவன், மாவட்டதுணைதலைவர் தீனன், மண்டலதலைவர்கள் குணாநிதி, தணிகைவேல், முன்னாள் நகரதலைவர்கள் ஜெகதீசன், சரவணன், பொறுப்பாளர்கள் சேகர், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story