நாகையில் நடந்த அகில இந்திய விவசாயிகள் சங்க 30- வது தேசிய மாநாட்டில்
நாகையில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நேற்று (17-ம் தேதி) வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. மாநாட்டில், தேசிய அளவில் கேரளா, திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் 700-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, தோழர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, நாற்காலிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் தோழர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோழர்களோடு தோழர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் மற்றும் அவருடன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் என்.பெரியசாமி ஆகியோர் நாற்காலிகளை வரிசைப்படுத்தினர். அதுமட்டுமின்றி, நேற்று நடந்த தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களை விழா மேடையில் அமர வைத்து, சிபிஐ மாநில செயலாளர் ரா.முத்தரசன், சிறிது நேரம் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தார். பின்னர், மேடைக்கு அருகில் நின்று நிகழ்ச்சியை பார்த்தபடி இருந்தார். இச்செயல், அவரது எளிமையை வெளிப்படுத்தி உள்ளது. பிரதிநிதிகள் அமர்வதற்காக நாற்காலிகளை வரிசைப்படுத்துவதும், தனக்கான நாற்காலியை பிரதிநிதிகளுக்கு கொடுத்த மாநில செயலாளரின் செயல், பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
Next Story





