காஞ்சியில் சாலையை விரிவுபடுத்த 30 இடங்களில் வாகனங்கள் கணக்கெடுப்பு

காஞ்சியில் சாலையை விரிவுபடுத்த 30 இடங்களில் வாகனங்கள் கணக்கெடுப்பு
X
காஞ்சிபுரம் உபகோட்டத்தில் நடந்த கணக்கெடுப்பு பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறித்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகன கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதன்படி, காஞ்சிபுரம் உப கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு நெடுஞ்சாலைத் துறை சார்பில், வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில், காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, வந்தவாசி சாலை, கீழம்பி சாலை, வேலுார் சாலை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட 30 இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. இப்பணியில், ஒரு மையத்திற்கு இரு நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், சாலையில் செல்லும் சைக்கிள், டூ - வீலர், டிராக்டர், ஆட்டோ, கார், பேருந்து, லாரி, டிப்பர், விவசாய சார்ந்த வாகனங்கள் இயக்கம் குறித்து கணக்கெடுத்து, தனித்தனியாக பதிவு செய்கின்றனர். காஞ்சிபுரம் உபகோட்டத்தில் நடந்த கணக்கெடுப்பு பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Next Story