கரூர்-30 மாணாக்கர்களுக்கு சங்கமம் அறக்கட்டளையின் சார்பில் உணவு உடை வழங்கும் விழா நடைபெற்றது.
கரூர்-30 மாணாக்கர்களுக்கு சங்கமம் அறக்கட்டளையின் சார்பில் உணவு உடை வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் ஜவகர் பஜாரில் அமைந்துள்ள தனியார் கூட்ட அரங்கில் சங்கமம் அறக்கட்டளையின் சார்பில் 2-வது ஆண்டாக ,2025 - 26 ஆம் கல்வி ஆண்டில் பெற்றோர் மற்றும் பெற்றோர்களை இழந்த முப்பது மாணாக்கர்களுக்கு உணவு உடை கல்வி செலவை ஏற்கும் விழா அறக்கட்டளையின் நிறுவனர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்துகொண்டு மாணாக்கர்களுக்குஉணவு, உடை,புத்தகப் பை உள்ளிட்ட பயில்வதற்கான உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள், மாணாக்கர்கள் , சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story






