ஸ்ரீநேசா தொண்டு நிறுவனம் 30 கோடி வரை மோசடி

ஸ்ரீநேசா தொண்டு நிறுவனம் 30 கோடி வரை மோசடி
X
பழநி ஸ்ரீநேசா தொண்டு நிறுவனம் 30 கோடி வரை மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு
கோயம்புத்துாரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் ஆகியோர் பழநியில் ஸ்ரீநேசா பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தினார். டெபாசிட் செய்தால் 2.5 சதவீதம் வட்டி தருவதோடு, 2 கிராம் தங்க நாணயம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதைநம்பி சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்ட ஏஜென்ட்கள் மூலம் பலகோடி வைப்புத்தொகை பெற்று நிறுவனத்தை மூடிவிட்டு மூவரும் தலைமறைவாகினர். திண்டுக்கல்லை சேர்ந்த மதன்பிரசாத்(34) புகாரில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் செந்தில்குமார் மனைவி ஜெயந்தி ஆகியோரை கைது செய்து சக்திவேலை தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின்படி மோசடி ரூ.30கோடியாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், அசல் ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story