நடுக்கடலில் மோதல் 30 மீனவர்கள் மீது வழக்கு 

நடுக்கடலில் மோதல் 30 மீனவர்கள் மீது வழக்கு 
X
மணவாளக்குறிச்சி
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் வள்ளம்  மீனவர்கள் நேற்று முன்தினம்  காலை கடலில் மீன் பிடிக்க சென்றனர். 3 கடல் நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்தனர். அப்போது, முட்டத்தை சேர்ந்த நான்கு வள்ளங்களில் வந்த மீனவர்கள் கடியப்பட்டணம் மீனவர்களின் வள்ளத்தை சுற்றி வளைத்து தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினுடைய ஏற்பட்ட மோதலில் ஆரோக்கிய மகேஷ், ஆண்டனி தினேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. குளச்சல் மரைன் போலீசார் 2 பகுதிகளை சேர்ந்த 30 பேர் மீது 7 பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story