ஓட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 30 பேர் காயம்!
ஓட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 30 பேர் காயம் - திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற போது நடந்த விபத்து- காயம் அடைந்தவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்* தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓம் சரவணபவன் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் வேல்முருகன் என்பவருக்கு நேற்று காலையில் திருமணம் முடிந்த நிலையில் இன்று காலையில் ஓம் சரவணபுரம் கிராமத்திலிருந்து 30-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை பசுவந்தனையை சேர்ந்த கைலாசம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். முறமன் - குலசேகரநல்லூர் இடையே காட்டுப்பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து இரண்டு முறை பல்டி அடித்து சாலையில் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் சென்ற 30 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மணியாச்சி போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஒட்டப்பிடாரம் வ உ சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்சி சண்முகையா உடனடியாக நேரில் சென்று காயமடைந்தவர்களை ஆறுதல் கூறி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் தொலைபேசி தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்... மேலும் விபத்து குறித்து மணியாச்சி போலீசார் ஓட்டுனர் கைலாசம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story




