சங்கரன்கோவிலில் நாய் கடித்து 30ஆடுகள் பலி

சங்கரன்கோவிலில் நாய் கடித்து 30ஆடுகள் பலி
X
நாய் கடித்து 30ஆடுகள் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தென்றல் நகர் 2ம் தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் அதே பகுதியில் கொட்டகை அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு அவர் தூங்க சென்ற பிறகு, நள்ளிரவு 3 மணி அளவியில் அப்பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்கள் கொட்டகைக்குள் புகுந்து அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் 30 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது. இன்று காலை கொட்டகைக்கு வந்து பார்த்த லியாகத் அலி ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்கள் கடித்து ஆடுகள் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுததியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story