திருச்செங்கோட்டில் ரூ 30 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுமான பணி பூமி பூஜை செய்து துவக்கம்

X
Tiruchengode King 24x7 |25 Nov 2025 6:31 PM ISTதிருச்செங்கோட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி திருச்செங்கோடு எம் எல் ஏஈஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்
திருச்செங்கோடு பகுதியில் கபடி வாலிபால்தடகள விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில்சிறப்பான இடத்தை பெற்று வரும் நிலையில் இந்தப் பகுதியில் விளையாட்டு அரங்கம் வேண்டுமென பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் ஆகியவற்றுடன் மூன்று கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளின் துவக்க விழா இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. பணிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய இதற்கான ட்ராக்,கால்பந்து விளையாட்டு மைதானம் வாலிபால் விளையாட்டு மைதானம்,கபடி விளையாட்டு மைதானம் லாங் ஜம்ப் விளையாட உரிய இடம் கோக்கோ போட்டிக்கான இடம்நிர்வாக அறைமேலும் பார்வையாளர் அமைந்து பார்வையிட நூறடி நீளம் 15 அடி உயரம்கொண்ட பார்வையாளர் மாடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.இந்தக் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் விளையாட்டு மைதான வளாகத்தில் நடைபெற்றது.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சிறு விளையாட்டு அரங்க பணியினை துவக்கி வைத்தனர் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைய உள்ளதாகவும் இதில் பல்வேறு விளையாட்டுகளை நடத்த ஏதுவாகவும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியாகவும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.பூமி பூஜை நிகழ்ச்சியில்நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு,திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின்,மாவட்ட விளையாட்டு அலுவலர்கோகிலா திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி,நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந்தில்,தீரன் தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் குரு இளங்கோ,திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர்கள் வடக்கு ஒன்றியம் வட்டூர் தங்கவேல் தெற்கு ஒன்றியம் தாமரைச்செல்வன், மத்திய ஒன்றியம் அருண், திருச்செங்கோடு நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன் செல்வி ராஜவேல், சினேகா ஹரிகரன்,திவ்யா வெங்கடேஸ்வரன்,ரமேஷ்,கலையரசி,ராஜா அண்ணாமலை,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
