திருச்செங்கோட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட கடைசி முகாம் 30 வார்டுகளில் 10 முகாம் நடத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள மூன்று வார்டுகளுக்கான 11 வது முகாம் இன்று நடந்தது

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட கடைசி முகாம். 11 கட்டங்களாக திட்டமிடப்பட்ட முகாம்களின் கடைசி 11 வது கட்ட முகாம் கொக்கராயன் பேட்டை ரோட்டில் உள்ள வேலவன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு துவக்கி வைத்தார்
பொதுகமக்கள் இருக்கும் இடங்களுக்கு அரசுத் துறையினர் சென்று தீர்க்கப்படாத அவர்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது அதன்படி திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளை மூன்று மூன்று வார்டுகளாக பிரித்து 11 கட்டங்களாக முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது அதன்படி 10 முகாம்கள் நடந்து முடிந்த நிலையில் கடைசி கட்ட 11 வது முகாம் கொக்கராயன் பேட்டை ரோட்டில் உள்ள வேலவன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். 13 அரசு துறைகளைச் சார்ந்த 46 பணிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகராட்சி பொறியாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் முருகேசன், அசோக்குமார், செல்லம்மாள் தேவராஜன், சினேகா ஹரிகரன், செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், ராதா சேகர் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பெற ஏராளமான பேர் விண்ணப்பம் கொடுத்தனர். மேலும் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் மின் இணைப்பு பெயர் மாற்றம், நகராட்சி வரி விதிப்பு,குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் ஆதார் கார்டுகளில் திருத்தம் ஆகிய உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமான பெண்கள் திரண்டு வந்து முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் உடனடியாக தீர்வு காணப்பட்ட நல வாரியத்தில் உறுப்பினர் அட்டை பெற்ற இரண்டு பேர் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம்செய்த இரண்டு பேர் மின்இணைப்பு பெயர் மாற்றம்செய்த இரண்டு பேர் என ஆறு மனுக்களுக்கு உடனடியாக உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டது உத்தரவினை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,நகராட்சி ஆணையாளர் வாசுதேவன்,மின்வாரிய அதிகாரிகள் நலவாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் வழங்கினார்கள்.
Next Story