கண்மாய் கரையில் சேதமடைந்து கிடக்கும் சாலையில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த மினி பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 20 கவிழ்ந்து விபத்து

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாய் கரையில் சேதமடைந்து கிடக்கும் சாலையில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த மினி பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்திற்குள் கவிழ பார்த்தது அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் மம்சாபுரம் வரை 2 மினி பேருந்துகள் கோட்டைப்பட்டி கண்மாய்க்கரை சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான பயணிகள் இந்த மினி பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டைப்பட்டி கண்மாய்க்கரை சாலை மிகவும் பழுதாகி சேதம் அடைந்து மரண குழிகளாக கிடைப்பதால் விபத்து ஏற்படும் அச்சமும் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரம் பகுதிக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு மினி பேருந்து சென்றுள்ளது. இந்நிலையில் கோட்டைப்பட்டி கண்மாய்க்கரை சாலையில் மினி பேருந்து சென்ற போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து மரண குழியில் ஏறி இறங்கியதில் கண்மாய் கரை விளிம்பு சாலையில் பதிந்து 20 அடி பள்ளத்தில் கவிலும்படி சாய்ந்து நின்றுள்ளது பயணிகள் அச்சமடைந்து அலறி அடித்துக் கொண்டு அவசர அவசரமாக பேருந்தில் இருந்து கீழே இறங்கியும் குதித்தும் ஓடியுள்ளனர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.பின்னர் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கண்மாய்கரையில் கவிழ்ந்து விழும் படி பதிந்து நின்ற பேருந்தை தூக்கி வைத்தனர். கோட்டைப்பட்டி கண்மாய்கரை சாலை சேதமடைந்து கிடந்ததால் அதில் வந்த மினி பேருந்து இன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இந்த சம்பவம் நடைபெற்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சாலையை சீரமைத்து தரும்படி அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கோட்டைப்பட்டி கிராம மக்கள், மம்சாபுரம் பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே மினி பேருந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மம்சாபுரம் காந்திநகர் அருகே உள்ள சாலையில் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள், இரண்டு இளைஞர்கள் மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

