தஞ்சாவூர் மாநகராட்சியில், ஏப்.30 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை

தஞ்சாவூர் மாநகராட்சியில், ஏப்.30 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை
X
மாநகராட்சி
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீதம் ஊக்கத் தொகையை பெறலாம் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை கிடைக்கும். அதாவது 2025-26 நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை 30-ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்கும். பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே சொத்து வரி செலுத்த https://tnurbanepay.tn.gov.in/PT-CPPaymentDetails.aspx#) என்ற இணையதளம் வழியாகவும் கியூ ஆர் கோடு, நெட் பேங்கிங், டெபிட், கிரடிட் கார்டு, யூபிஐ, கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் வழியாகவும் எளிய முறையில் தங்களது வரியை செலுத்தி கொள்ளலாம். இது தவிர தஞ்சை மாநகராட்சி அலுவலகம், முனிசிபல் காலனி, சுற்றுச்சூழல் பூங்கா (சரபோஜி கல்லூரி எதிர்புறம்), கல்லுக்குளம் ஆகிய வரிவசூல் மையங்களுக்கு சென்றும் சொத்து வரியை செலுத்தலாம். எனவே, தஞ்சை மாநகராட்சி மக்கள், வியாபாரிகள், கட்டட உரிமையாளர்கள் அனைவரும் வரும் 30 ஆம் தேதிக்குள் தங்களது சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத் தொகையை பெற்று பயன் பெற்றிடுங்கள்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story